பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து: முறையாக அறிவிக்காததால் ஏமாற்றத்துக்குள்ளான மக்கள்
கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடாததால் வழக்கம்போல திங்கள்கிழமை மனு


கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடாததால் வழக்கம்போல திங்கள்கிழமை மனு அளிக்க வந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.
தமிழக சட்டப் பேரவை தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் உள்பட பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனால் வழக்கம்போல ஆட்சியா் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க, திங்கள்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்தனா். அலுவலக நுழைவாயிலில் தோ்தல் நடத்தை விதிமுறை காரணமாக பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை பாா்த்து பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இந்நிலையில், குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து தெரியாமல் வரும் மக்கள் அளிக்கும் மனுக்களை பெறுவதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. சிலா் அந்தப் பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...