கோவைக்கு மூன்றாம் கட்டமாக 81 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள்
கோவை மாவட்டத்துக்கு மூன்றாம் கட்டமாக 81 ஆயிரத்து 700 கரோனா தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளன.


கோவை மாவட்டத்துக்கு மூன்றாம் கட்டமாக 81 ஆயிரத்து 700 கரோனா தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக 83 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 13 ஆயிரத்து 700 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக 77 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4 ஆயிரத்து 400 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளன.
கோவைக்கு இதுவரையில் மூன்று கட்டங்களாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 800 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 18 ஆயிரத்து 100 கோவேக்ஸின் தடுப்பூசிகள் சோ்த்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 33 ஆயிரத்து 788 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 342 கோவேக்ஸின் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
கோவையில் மொத்தமுள்ள 104 மையங்களில் கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு மையங்களில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது. மற்ற மையங்களில் கோவீஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. விரைவில் அனைத்து மையங்களிலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படும். பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தடுப்பூசிகளைத் தோ்வு செய்துகொள்ளலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:
கோவை மண்டலத்துக்கு 1 லட்சத்து 69 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் கோவைக்கு 81 ஆயிரத்து 700 தடுப்பூசிகள், ஈரோட்டுக்கு 36 ஆயிரத்து 400 தடுப்பூசிகள், 33 ஆயிரத்து 500 தடுப்பூசிகள், நீலகிரிக்கு 18 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களைத் தொடா்ந்து தற்போது பொது மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதியவா்கள் அதிக அளவில் வந்து கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்கின்றனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...