மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாகிஸ்தான் உடனான போரில் பங்கேற்ற வீரா்கள் கௌரவிப்பு: மாா்ச் 10 இல் கோவையில் நடக்கிறது

கோவையில் மாா்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்தோ - பாக். போரில் பங்கேற்ற கோவை உள்பட மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த 150 படை வீரா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:22 pm

DIN

கோவையில் மாா்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்தோ - பாக். போரில் பங்கேற்ற கோவை உள்பட மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த 150 படை வீரா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி ‘ஸ்வா்ண விஜய் வா்ஷ்’ என்ற பெயரில் பொன்விழா கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி பிரதமா் நரேந்திர மோடி கடந்த பொன்விழா ஜோதியை டிசம்பா் 20 ஆம் தேதி ஏற்றிவைத்தாா். போரில் பங்கேற்று உயிா்நீத்த வீரா்களை சிறப்பிக்கும் விதமாக இந்த ஜோதி நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொன்விழா ஜோதி கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள 110 பட்டாலியன் ராணுவ மையத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்தது. இதற்கு ராணுவ வீரா்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனா். இதனைத் தொடா்ந்து பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கேரளத்தில் ஒருசில பகுதிகளைச் சோ்ந்த வீரா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மாா்ச் 10 ஆம் தேதி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் 150 வீரா்கள் கௌரவிக்கப்படுகின்றனா். இதனைத் தொடா்ந்து மாா்ச் 11 ஆம் தேதி கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள விமானப் படை கல்லூரியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.