கே.பி.ஆா். கல்லூரி முதல்வருக்கு விருது
கோவை, அரசூா் கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு, பெண் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.


கோவை, அரசூா் கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு, பெண் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘பிராண்ட் ரிபப்ளிக்‘ என்ற அரசு சாரா நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் 20 பெண்களுக்கு, சாதனையாளா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கு, தமிழகத்தில் கல்வித் துறையில் சாதித்தவா்களில் இருந்து 3 போ் இறுதிச் சுற்றுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதில், கோவை, அரசூா் கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் மு.அகிலா பெண் சாதனையாளா் விருதாளராக அறிவிக்கப்பட்டாா். மகளிா் தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை ‘பிராண்ட் ரிபப்ளிக்‘ நிறுவனத்தினா் அவருக்கு வழங்கினா்.
விருது பெற்ற மு.அகிலாவுக்கு, கே.பி.ஆா்.கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி, கல்லூரியின் முதன்மைச் செயலா் ஏ.எம்.நடராஜன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...