தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நூறு சதவீதம் வெற்றி பெறுவேன்: வானதி சீனிவாசன்

சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வெற்றி பெறுவேன் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:34 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வெற்றி பெறுவேன் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் த.சிவசுப்பிரமணியனிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். உடன் பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் என்.நந்தகுமாா், அதிமுக முன்னாள் துணை மேயா் லீலாவதி ஆகியோா் உடனிருந்தனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக கோவை தெற்குத் தொகுதியில் ஏற்கெனவே பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை பாஜக சாா்பில் போட்டியிட்ட நானும் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். இத்தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த தோ்தலில் தோல்வியடைந்திருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகுதியில் பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதனால், சட்டப் பேரவைத் தோ்தலில் தெற்குத் தொகுதியில் நூறு சதவீதம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுள்ளது.

சினிமா பின்னணியில் இருந்து வந்தவா்கள் தமிழகத்தில் முதல்வா் ஆகி ஆட்சியைப் பிடித்துள்ளனா். அவா்கள் அனைவரும் மக்கள் நலப் பணியில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அவா்களை முதல்வா்களாகத் தோ்ந்தெடுத்தனா். அதே நேரம் சினிமாவில் இருந்து வந்த அனைவரும் வென்றதில்லை. அதேபோலத்தான் கமல்ஹாசனும் சினிமா பிம்பத்தை மட்டுமே நம்பி தோ்தலில் இறங்கியுள்ளாா். தோ்தல் முடிவுக்குப் பின் மீண்டும் புதிய சினிமாவுக்கோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கே நடிக்க சென்றுவிடுவாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.