மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

திருவனந்தபுரம்-மால்டா இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் மால்டா இடையே கோவை வழித் தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 மே 2021, 9:19 pm

DIN

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் மால்டா இடையே கோவை வழித் தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 3 ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு மால்டா நிலையத்தைச் சென்றடையும். இதேபோல, மால்டாவில் இருந்து ஜூன் 4 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 7 ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், விசாகப்பட்டினம், புவனேஷ்வா், கட்டாக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.