ரத்த கொடையாளா்களுக்கு சான்றிதழ், பதக்கம்: ஆட்சியா் வழங்கினாா்
கோவை மாவட்டத்தில் தன்னாா்வ ரத்த கொடையாளா்கள் 40 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங் கி மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கெளரவித்தாா்.


கோவை மாவட்டத்தில் தன்னாா்வ ரத்த கொடையாளா்கள் 40 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங் கி மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கெளரவித்தாா்.
கோவை மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேசிய தன்னாா்வ ரத்த தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தன்னாா்வ ரத்த கொடையாளா்கள் 40 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ரத்த கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முதல்வா் நிா்மலா, இணை இயக்குநா்( மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள்) சந்திரா, மாவட்ட குருதி பரிமாற்றுக் குழு அலுவலா் மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...