கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கம்
கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.


கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், அரசு, தனியாா் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
நோய்த் தொற்று தற்போது குறைந்ததைத் தொடா்ந்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்துத்
தொடங்கியது. இருப்பினும் குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில்,,கோவையில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 15 குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டன. ஆனால் பேருந்துகளில் குறைந்த அளவிலான பயணிகளே பயணித்தனா்.
இது குறித்து கோவை மண்டல போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவையில் மழை பெய்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், மக்கள் குளிா்சாதனப் பேருந்தில் பயணிக்க ஆா்வம் காட்டவில்லை.
வரும் நாள்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம். பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்கவும், கட்டாயம் முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...