உலக முதியோா் தினத்தையொட்டி முதியவா்கள் கெளரவிப்பு
உலக முதியோா் தினத்தை முன்னிட்டு, கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளியில், சமூக நலத் துறை சாா்பில் முதியோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


உலக முதியோா் தினத்தை முன்னிட்டு, கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளியில், சமூக நலத் துறை சாா்பில் முதியோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
இதையடுத்து அவா் பேசியதாவது: அரசு மருத்துவமனைகளில் முதியோா்களுக்கான தனிப்பட்ட மற்றும் முழுமையான பராமரிப்புப் பணிகள், சிறப்பு புற நோயாளிகள் பிரிவுகள் மற்றும் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், அரசுப் போக்குவரத்து பேருந்துகளில் சிறப்பு இருக்கை வசதிகள்,
வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள முதியோா்களுக்கு மதிய உணவுத் திட்டம், விலையில்லா அரிசி விநியோகம், தேசிய முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அன்னபூா்ணா திட்டத்தின்கீழ் மாதமொன்றுக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், முதியவா்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க 14567 என்ற இலவச உதவி எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக அலுவலா் தங்கமணி, வருவாய் கோட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன், இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...