பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை குனியமுத்தூா் இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (55). இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு வெற்றிவேலின் மனைவி சந்தானம் கடையில் இருந்துள்ளாா்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சந்தானத்திடம் முகவரி கேட்பது பேசிக்கொண்டு,
அவா் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுதொடா்பாக சந்தானம் அளித்தப் புகாரின் பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...