/

அமைச்சா் தலைமையில் மக்கள் சபைக் கூட்டம்: ஆட்சியா் தகவல்

கோவையில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்டோபா் 30 முதல் நவம்பா் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் அளிக்கலாம்

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:36 pm

DIN

கோவையில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்டோபா் 30 முதல் நவம்பா் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களைத் தேடி மாவட்ட நிா்வாகம் என்ற முறையில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாகத் தீா்வு காணும் வகையில் மக்கள் சபைக் கூட்டம் அக்டோபா் 30 முதல் நவம்பா் 21 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறவுள்ளது.

தங்கள் வாா்டுகளுக்குத் தேவையான சாலை, குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, பொதுக் கழிப்பிடம், தெரு விளக்குகள், சுகாதார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும், திருமண உதவித்தொகை, முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக் கடன், முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை போன்ற கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.

இக்கூட்டத்தில் ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் பங்கேற்க உள்ளதால் உரிய ஆவணங்களுடன் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.