/

மழைக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

பருவ மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:37 pm

DIN

பருவ மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மழைக் காலங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கு போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டத்தில் மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 2 மருத்துவா்கள், 1 செவிலியா், 2 சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் கிராம பகுதிகளுக்குச் சென்று மழைக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

மழைக் காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த குடிநீரை கட்டாயம் காய்ச்சி குடிக்க வேண்டும். மழை நீரில் நனைந்த உணவுப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. வீடுகளை சுற்றி மழைநீா், கழிவுகள் தேங்காத வகையில் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

மழைக் காலங்களில் சுகாதாரத் துறை தொடா்பான அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.