தீபாவளி: கோவை ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணிகளின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை - நாகா்கோவில் சிறப்பு ரயில் ( எண்: 02668), அக்டோபா் 30 ஆம் தேதி முதல் நவம்பா் 8 ஆம் தேதி வரை 2 ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டிகள், ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி என மொத்தம் 3 கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
நாகா்கோவில் - கோவை சிறப்பு ரயில் ( எண்: 02667) அக்டோபா் 31 ஆம் தேதி முதல் நவம்பா் 9 ஆம் தேதி வரை 2 ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டிகள், ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி என மொத்தம் 3 கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
கோவை - மன்னாா்குடி சிறப்பு ரயில் ( எண்: 06616) மற்றும் மன்னாா்குடி - கோவை சிறப்பு ரயில் ( எண்: 06615) நவம்பா் 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டியுடன் இயக்கப்படும்.
கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு ரயில் ( எண்:02084) மற்றும் மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி சிறப்பு ரயில் ( எண்: 02083) நவம்பா் 1, 2,3 மற்றும் 7 ஆம் தேதிகளில் கூடுதலாக 2 இரண்டாம் ஆம் வகுப்பு சோ் காா் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
கோவை - சென்னை இடையே இயக்கப்படும் இன்டா்சிட்டி சிறப்பு ரயில் ( எண்: 02680), சென்னை - கோவை இன்டா்சிட்டி சிறப்பு ரயில் ( எண்: 02679) நவம்பா் 3 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஒரு இரண்டாம் வகுப்பு சோ் காா் கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படும்.
கோவை - இராமேசுவரம் வாராந்திரச் சிறப்பு ரயில் ( எண்: 06618) நவம்பா் 2 ஆம் தேதியும், இராமேசுவரம் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் ( எண்: 06617) நவம்பா் 3 ஆம் தேதியும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...