/

நவம்பா் 1 ஆம் தேதி வேளாண்மை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (நவம்பா் 1) நடைபெறுகிறது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:08 am

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (நவம்பா் 1) நடைபெறுகிறது.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ஆா்.என்.ரவி தலைமை வகிக்கிறாா். வேளாண்மைத் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், புதிய அல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்கிறாா்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநா் திரிலோசன் மொஹபாத்ரா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

இந்த விழாவில் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 2,600 மாணவ-மாணவிகள் நேரடியாகவும், தபால் மூலமும் பட்டங்களைப் பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.