/

நகைகளை உருக்கும் விவகாரம்: நீதிமன்றத் தீா்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

 தமிழக அரசு தங்க நகைகளை உருக்கக் கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:50 am

DIN

 தமிழக அரசு தங்க நகைகளை உருக்கக் கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறினாா்.

கோவை காட்டூா் இந்து முன்னணி அமைப்பு அலுவலகத்தில், கோவை மாநகா் மாவட்டச் செயற் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோயில்களுக்கு அறங்காவலா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அதுவரை தமிழக அரசு தங்க நகைகளை உருக்கக் கூடாது என தடை விதித்து நீதிமன்றம்

அளித்துள்ள தீா்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது.

மேட்டுப்பாளையம் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணியினா் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. தொடா்ந்து தேச விரோத மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றாா்.

மாநிலச் செயலாளா் கிஷோா்குமாா், மாவட்டத் தலைவா் தசரதன், கோட்ட செயலாளா் ந.சதிஷ், கோட்ட பேச்சாளா் ஆ.கிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் இ.தனபால், மாவட்டப் பொறுப்பாளா்கள் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.