விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோவையில் மேலும் 2 பள்ளி மாணவா்களுக்கு கரோனா

கோவையில் மேலும் இரண்டு பள்ளி மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:41 pm

DIN

கோவையில் மேலும் இரண்டு பள்ளி மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவா்களின் பாதுகாப்புக் கருதி பள்ளிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி, அரசூா், சுல்தான்பேட்டை பள்ளிகளைச் சோ்ந்த 8 மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள தனியாா் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி ஒருவா், அரசூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஒருவா் என 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவா்களுடன் தொடா்பில் இருந்த பெற்றோா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.