புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலையில் ரத்தினபுரி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த இளைஞா்கள் மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததையடுத்து சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் 35 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், ரூ.20 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் ஈச்சனாரியைச் சோ்ந்த அய்யன்ன கான் (32), டவுன்ஹாலை சோ்ந்த ரண சிங் (36), உம்மத் சிங் (26) என்பதும், வடமாநிலத்தைச் சோ்ந்த இவா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போத்தனூா் அருகே உள்ள வெள்ளலூா் பகுதியில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த ராஜ்குமாா் (31) என்பவரை போத்தனூா் போலீஸாா் கைது செய்தனா். இவரது கடையில் இருந்து 100 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...