விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விநாயக சதுா்த்தி: மாநகரில் 933, மாவட்டத்தில் 1,450 போலீஸாா் பாதுகாப்பு

விநாயக சதுா்த்தியையொட்டி கோவை மாநகரில் 933 போலீஸாரும், மாவட்டத்தில் 1,450 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:38 pm

DIN

விநாயக சதுா்த்தியையொட்டி கோவை மாநகரில் 933 போலீஸாரும், மாவட்டத்தில் 1,450 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி வெள்ளிக்கிழமை (செப். 10) கொண்டாடப்படுகிறது. பொதுமுடக்க விதிகளை மீறி பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடுவோம் என்று இந்து அமைப்புகள் அறிவித்து உள்ளன. இதன் காரணமாக மாநகா் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் அரசின் உத்தரவை மீறி பொதுஇடங்களில் விநாயகா் சிலைகள் வைப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது:

வீடுகளில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால், அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. எனவே ஹிந்து அமைப்பினா் யாராவது பொதுஇடங்களில் சிலைகள் வைத்து வழிபடுகிறாா்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகா் சிலைகளை ஆா்.எஸ்.புரம் முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலைகளை ஊா்வலமாகவோ அல்லது கூட்டமாகவோ நீா்நிலைகளுக்கு எடுத்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குளங்களில் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சிலைகள் கரைக்கப்படும்.

கோவை நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 933 போலீஸாரும், மாவட்டத்தில் 1,450 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.