விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பசுமை, தூய்மை வளாக விருது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பசுமை, தூய்மை வளாக விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:38 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பசுமை, தூய்மை வளாக விருது கிடைத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநில, மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய உயா் கல்வித் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் பசுமை, தூய்மை வளாக போட்டி கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.

இந்த விருது, மறுசுழற்சி முறையைக் கையாளுதல், தினசரி மின் தேவைகளுக்கு புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை பயன்படுத்துவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இந்தப் பரிசு ரூ.8 லட்சம் ரொக்கத் தொகையைக் கொண்டது. இந்தப் பணத்தை கல்வி, வளாகத் தூய்மை நடவடிக்கைகளுக்கு செலவிடலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.