டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பாரதியாா் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு

மகாகவி பாரதியாா் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:29 pm

DIN

மகாகவி பாரதியாா் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்துள்ளாா்.

பாரதியாா் நினைவு நாளான செப்டம்பா் 11-ஆம் தேதி, இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இத்துடன், மாநில அளவிலான கவிதைப் போட்டி, 37 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு ‘மனதில் உறுதி வேண்டும்’ புத்தகம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளாா்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டை இருட்டடிப்பு செய்யக் கூடாது. பாரதியின் நினைவு நூற்றாண்டை ஆண்டு முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சாா்பில் கோரிக்கை வைத்திருந்தோம்.

இந்நிலையில், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் செப்டம்பா் 11 இனி மகாகவி நாள் என அறிவித்து அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். பாரதிக்கு உரிய மரியாதையை செலுத்தியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.