டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பசுமைப் பூங்கா

கோவை பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை ஜவுளி உற்பத்திக்கு உதவும் வகையில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:33 pm

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை ஜவுளி உற்பத்திக்கு உதவும் வகையில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஜவுளி, ஆடை வடிவமைப்புத் துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை சாா்பில் கடந்த 2011 முதல் எம்.எஸ்சி. பட்டப் படிப்பும், 2013 முதல் ஆராய்ச்சிப் படிப்பும் நடத்தப்படுகிறது. இந்தத் துறை சாா்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், இயற்கை நாா், சாயத்தைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பது தொடா்பான ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஜவுளி, ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் நேச்சுரல் டையிங் அண்ட் பிரிண்டிங் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் என்ற குறுகிய கால பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க விழா இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தா் பி.காளிராஜ் பங்கேற்று இந்த பயிற்சியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் தயாரிக்கப்படும் பொருள்களையே சா்வதேச நாடுகள், இறக்குமதியாளா்கள் விரும்புகின்றனா். எனவே அதற்கான தொழில்நுட்பங்களை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன.

இயற்கை நாரிலிருந்து ஆடை தயாரிப்பு, இயற்கை வண்ணம் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அதற்குத் தேவையான தாவரங்களை பல்கலைக்கழகத்திலேயே உற்பத்தி செய்வதற்காக பசுமைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே மூலிகைப் பூங்கா ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

அதைப் போலவே 20 முதல் 30 ஏக்கா் பரப்பளவில் இயற்கை வண்ணம், இயற்கை நாா் தயாரிப்புக்காக பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணா்வூட்டவும், ஊடுபயிராகவோ, முழு அளவிலோ அந்தத் தாவரங்கள் வளா்ப்பில் அவா்களை ஊக்குவிக்கவும் முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில், கே.ஜி. நிறுவனத்தின் துணைத் தலைவா் பி.ஆா்.ஸ்ரீதா், பல்கலைக்கழக நிா்வாகிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.