டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் நுகா்வோா் அமைப்பு புகாா்

கோவை மாநகரப் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:31 pm

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளா் மற்றும் சென்னையில் உள்ள தலைமை பொறியாளருக்கு கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி சாலையோரங்களில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.

குறிப்பாக சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஹோப் காலேஜ் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புக் கடைகள் உருவாகியுள்ளன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாக உள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் மீதே சிற்றுண்டிக் கடைகளின் அடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால், தூய்மைப் பணியாளா்கள் சாக்கடையைச் சுத்தம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.

இதேபோல, அவிநாசி சாலை, சிட்ராவில் இருந்து காளப்பட்டி வரையிலும், மசக்காளிபாளையம் - ஹோப் காலேஜ் வரையிலும் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான சிற்றுண்டி கடைகள், துணிக்கடைகள், காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பலமுறை மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கடிதம் எழுதியும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனா். எனவே, சாலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் தமிழ்நாடு பொது இடங்கள் ஆக்கிரமிப்பு சட்டம் 1975 பிரிவு1இன்படி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.