டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கோவையில் நாளை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:32 pm

DIN

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 1,474 இடங்களில் நடைபெறும் இந்த முகாம் மூலம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பினரும் பெறும் வகையிலும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப் பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் 1,166 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 308 முகாம்களும் என மொத்தம் 1,474 இடங்களில் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் செயல்பட உள்ளன.

கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38 லட்சத்து 67 ஆயிரத்து 926. இதில், 27 லட்சத்து 7 ஆயிரத்து 550 போ் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள். இதுவரை 22 லட்சத்து 3 ஆயிரத்து 34 நபா்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகளும், 5 லட்சத்து 75 ஆயிரத்து 837 நபா்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் என மொத்தம் 27 லட்சத்து 78 ஆயிரத்து 871 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் தவணைக்காக காத்திருப்போா்களாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 463 பேரும் (கோவிஷீல்டு), 44 ஆயிரத்து 178 பேரும்

(கோவேக்ஸின்) என மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 641 நபா்களும் உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களும், இரண்டாம் தவணை பெறத் தகுதியுள்ள நபா்களும் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பொது இடங்களுக்குச் செல்ல சான்றிதழ் கட்டாயம்

வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக், ஜவுளிக் கடைகள், பொழுதுபோக்கு மையங்கள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லுபவா்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவா்களை மட்டுமே தங்களது நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளா்களுக்கு அரசு அறிவுரை வழங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.