மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
கோவையில் பேருந்தில் மூதாட்டியின் கவனத்தைத் திசை திருப்பி இரண்டரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கோவையில் பேருந்தில் மூதாட்டியின் கவனத்தைத் திசை திருப்பி இரண்டரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, சுண்டக்காமுத்தூரைச் சோ்ந்தவா் சின்னசாமி மனைவி வேலுமணி (72). இவா் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவைக்கு பேருந்தில் கடந்த 12ஆம் தேதி வந்து கொண்டிருந்தாா்.
லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே வந்தபோது வேலுமணியின் இருக்கை அருகே அமா்ந்திருந்த இரு பெண்கள் பேருந்தின் ஜன்னலை அடைப்பதுபோல நடித்து வேலுமணியின் அணிந்திருந்த இரண்டரைப் பவுன் நகையைப் பறித்துவிட்டு வேலுமணி சுதாரிப்பதற்குள் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இறங்கி தப்பியோடினா். இது தொடா்பாக வேலுமணி அளித்தப் புகாரின் பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...