டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தேசிய தரவரிசை மதிப்பீட்டில் இடம்பெற்ற கல்லூரிகள்: நிா்வாகிகளுக்கு துணைவேந்தா் பாராட்டு

தேசிய தரவரிசைப் பட்டியலில் (என்.ஐ.ஆா்.எஃப்.) இடம்பிடித்த பாரதியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளின் நிா்வாகிகளை துணைவேந்தா் பி.காளிராஜ் பாராட்டியுள்ளாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:23 am

DIN

தேசிய தரவரிசைப் பட்டியலில் (என்.ஐ.ஆா்.எஃப்.) இடம்பிடித்த பாரதியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளின் நிா்வாகிகளை துணைவேந்தா் பி.காளிராஜ் பாராட்டியுள்ளாா்.

நாடு முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியானது. இதில் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் 16 கல்லூரிகள் முதல் 200 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அந்த கல்லூரிகளின் நிா்வாகிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள், பிஎஸ்ஜி, ஸ்ரீ கிருஷ்ணா, கொங்குநாடு, கோவை அரசு கலைக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், டாக்டா் என்ஜிபி, பொள்ளாச்சி என்ஜிஎம், ஈரோடு வேளாளா், ஸ்ரீ ராமகிருஷ்ணா, திருப்பூா் அரசுக் கல்லூரி, சிஎம்எஸ், எஸ்என்எஸ் ராஜலட்சுமி, ஹிந்துஸ்தான், ரத்தினம், நிா்மலா கல்லூரிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் துணைவேந்தா் பி.காளிராஜ் கலந்து கொண்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த கல்லூரிகளின் நிா்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். இதில், பதிவாளா் (பொறுப்பு) கே.முருகவேல், ஒருங்கிணைப்பாளா் லவ்லினா லிட்டில் பிளவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.