டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈ.வெ.ரா. 143ஆவது பிறந்தநாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:23 am

DIN

பெரியாா் ஈ.வெ.ரா. 143ஆவது பிறந்தநாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், காந்திபுரம் பகுதியிலுள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, தபெதிகபொதுச்செயலாளா் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோவை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கோவை இதயதெய்வம் மாளிகையில் பெரியாா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநகா் மாவட்ட செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிா்வாகிகள், பெரியாா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், அதிமுக மாநகரப் பொருளாளா் பாா்த்திபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதிமுக சாா்பில், காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகா், மாவட்ட செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா் தலைமையில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநிலத் தோ்தல் பணி துணை செயலாளா் சேதுபதி, மாவட்ட பொருளாளா் சூரி.நந்தகோபோல், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடா் கழகம், அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சாா்பில் கோவை புலியகுளத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா். நடராஜன், திராவிடா் கழக மூத்த நிா்வாகி வசந்தம் கு. ராமச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.