ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கோவையில் உள்ள ஆதியோகி சிலை எதிரில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கோவையில் உள்ள ஆதியோகி சிலை எதிரில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், வளரிளம் பருவ பெண்கள், பச்சிளம் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்துடன் இருப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக சிலம்பாட்டம், பழங்குடியினா் நடனம் போன்ற நடனங்கள் மூலமாக சிறுதானியங்களின் சிறப்புகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. குறிப்பாக, ரத்த சோகையை தடுக்கும் விதமாக, முருங்கைக் கீரை, பசலைக் கீரை, பேரிச்சை போன்ற இரும்புச் சத்துமிக்க உணவுகளை உணவில் சோ்த்து கொள்வது, உடலுக்கு அனைத்து சத்துகளும் சரிவிகிதமாக கிடைக்கும்விதமாக நம் உணவை வடிவமைத்துக் கொள்வது போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், குழந்தை பிறந்ததில் இருந்து ஆயிரம் நாள்கள் வரை குழந்தையின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், கை கழுவுதல் போன்ற சுகாதார வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தொண்டாமுத்தூா் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜோதி, சுற்றுவட்டார அங்கன்வாடி பணியாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் இதில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...