பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டம்

கோவையில் பல்வேறு இடங்களில் அனைத்துக்கட்சியினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது

News image
Updated On :27 செப்டம்பர் 2021, 7:35 am

DIN

கோவையில் பல்வேறு இடங்களில் அனைத்துக்கட்சியினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் ரயில் நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

Story image

இதில் விவசாயிகள், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சிகள், ஆட்டோ தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் ரயில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கோவை டவுன்ஹாலில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அங்கு உள்ள ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோவை ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

அவர்களை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதேபோல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.இந்த ரயில் மறியலில் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினர், அமைப்பினர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Story image

இதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் ஒரு சில ஆட்டோ சங்கத்தினர் தங்கள் ஆட்டோக்களை இயக்கவில்லை.  இதனால் மாநகரில் காலை முதலே பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள் முன்பு ஆட்டோக்களை பார்க்க முடியவில்லை.

Story image

அந்தந்த ஸ்டாண்டுகளிலேயே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் ஒரு புறமும் நடந்து கொண்டிருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், மளிகை, காய்கறி கடைகள், மார்க்கெட்டுகள் அனைத்து திறக்கப்பட்டிருந்தன.

Story image

அங்கு வழக்கம் போல வியாபாரம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.