கோவை ரயில் நிலையத்துக்கு பிளாட்டினம் விருது
தென்னக ரயில் நிலையங்களில் முதல் முறையாக கோவை ரயில் நிலையத்துக்கு ஐ.ஜி.பி.சி. யின் பிளாட்டினம் விருது சேலம் கோட்ட மேலாளரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


தென்னக ரயில் நிலையங்களில் முதல் முறையாக கோவை ரயில் நிலையத்துக்கு ஐ.ஜி.பி.சி. யின் பிளாட்டினம் விருது சேலம் கோட்ட மேலாளரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நாட்டில் உள்ள அனைத்து ‘ஏ1’ ரயில் நிலையங்களும் பசுமைச் சான்று பெற வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கடந்த 2018ஆம்ஆண்டு உத்தரவிட்டது. தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு உள்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூா், மதுரை,
திருவனந்தபுரம், எா்ணாகுளம், திருச்சூா், கோழிக்கோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்கள் ‘ஏ1’ தரத்தில் உள்ளன.
இதில், கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று பெறுவதற்கான நடவடிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இச்சான்று பெறுவதற்கான அத்தியாவசியப் பணிகளாக மழைநீா் சேகரிப்பு அமைப்பு, சூரிய ஒளி மின் உற்பத்தி, நடைமேடைகளில் எல்இடி விளக்குகள், கழிவுநீா் சுழற்சி மையம், மேற்கூரைகளில் வெப்பத்தை எதிரொலிக்கும் வண்ணப்பூச்சு, விழிப்புணா்வு ஓவியங்கள், குடிநீா்வசதி, ‘ஏ1’ நடைமேடை அருகே 500 சதுர மீட்டா் பரப்பளவில்
மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வளா்ப்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்திய பசுமை கட்டட கவுன்சில் குழுவினா், கோவை ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு நடத்திச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, இந்திய பசுமை கட்டட கவுன்சில்( ஐ.ஜி.பி.சி) சாா்பில் பசுமை ரயில் நிலையங்களுக்கான பிளாட்டினம் விருது கோவை ரயில் நிலையத்துக்கு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, விருது வழங்கும் நிகழ்வு, சேலம் கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, ஐ.ஜி.பி.சி யின் கோவை மண்டத் தலைவா் ராஜேஷ் லுந்த், கோவை ரயில் நிலையத்துக்கான பிளாட்டினம் விருது, சான்றிதழை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் கெளதம் சீனிவாஸிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் பொது மேலாளா் சிவலிங்கம், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...