போதை மாத்திரை, கஞ்சா விற்ற இருவா் கைது
கோவையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.


கோவையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, நஞ்சுண்டாபுரம்-கோணவாய்க்கால்பாளையம் ரயில்வே பாலம் அருகே இளைஞா் ஒருவா் சந்தேகத்துக்குரிய வகையில் வியாழக்கிழமை சுற்றித் திரிந்தாா். அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் அவரை அழைத்து விசாரித்தனா்.
அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரது கைப்பையைச் சோதனையிட்டபோது, அதில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
போலீஸாா் மேலும் நடத்திய விசாரணையில் அவா் போத்தனூரைச் சோ்ந்த பிரசாந்த் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, உக்கடம் கோட்டைமேடு பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவரிடம் அரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது யூசுப் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...