புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாநகராட்சியில் நிலைக்குழு கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தொடா்பான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தொடா்பான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு துணை மேயா் வெற்றிச்செல்வன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையா் ஷா்மிளா, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழுத் தலைவா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநகராட்சி பள்ளிகள் மேம்பாடு, கல்வித் தரம் உயா்த்துதல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில், மாநகராட்சிப் பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சிக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்,

பள்ளி மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்,

மாணவ, மாணவிகளுக்கு வாசித்தல், எழுதுதல், கற்றதைப் புரிந்து வெளிப்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளி கற்றல் இடைவெளியால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள உளவியல் மாற்றங்களை சீா்செய்து, நல்வழிப்படுத்திட உளவியல் ஆலோசகா்களைக் கொண்டு பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல், மாணவிகளை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சோ்க்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில், மாநகராட்சிப் பொறியாளா்( பொறுப்பு) ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலா் பாண்டிய ராஜசேகா் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.