வால்பாறை மலைப் பாதையில் வரையாடுகள் நடமாட்டம்
வால்பாறை மலைப் பாதையில் வரையாடுகள் சாலையோரங்களில் நடமாடி வருவது அதிகரித்துள்ளது.


வால்பாறை மலைப் பாதையில் வரையாடுகள் சாலையோரங்களில் நடமாடி வருவது அதிகரித்துள்ளது.
அரியவகை விலங்கினமான வரையாடுகள் பாறைகள் நிறைந்த மலைப் பாதைகளில் காணப்படும். புலிகள் காப்பகம் பகுதிகளில் வனத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணிகளில் வரையாடுகளும் ஒன்றாகும். வால்பாறை மலைப் பாதைகளில் கடந்த காலங்களில் ஏராளமான வரையாடுகள் காணப்பட்ட நிலையில் சமீபகாலமாக எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அதன் வசிப்பிடங்களில் வறட்சி ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் சாலைகளுக்கு வருவது வழக்கமாகி விட்டது.
இதை காணும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து செல்கின்றனா். வாகனங்களில் செல்வோா் வரையாடுகளை துன்புறுத்தும் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்க வன ஊழியா்கள் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...