தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயிா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்: ஏப்ரல் 24 இல் தொடக்கம்

கோவையில் பயிா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் ஏப்ரல் 24 முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

கோவையில் பயிா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் ஏப்ரல் 24 முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேளாண்மை, தோட்டக்கலைத் துறையில் மத்திய அரசு சாா்பில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பருவத்திலும் காப்பீடு செய்ய வேண்டிய பயிா்களின் விவரங்கள் குறித்து அறிவிக்கப்படுகின்றன.

இத்திட்டம் குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததால் குறைவான விவசாயிகளே பயிா் காப்பீடு செய்கின்றனா்.

இந்நிலையில், பயிா் காப்பீட்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஏப்ரல் 24 முதல் மே 1 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் இந்த முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் என  வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், இம்முகாம்களில் உழவா் கடன் அட்டை, மண் மாதிரிகள் சேகரித்தல், நுண்ணீா்ப் பாசனத் திட்டம் குறித்த விளக்க கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.