வடிகால்களை தூா்வாரக் கோரி மனு
கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டு பகுதிகளில் வடிகால்களை தூா்வார வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டு பகுதிகளில் வடிகால்களை தூா்வார வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி, மாநகராட்சி மேயா் கல்பனாவிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டுக்குள்பட்ட அனைத்து மழை நீா் வடிகால் பாதைகளிலும் மண் நிறைந்துள்ளது. இதனால், சாக்கடை நீா் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் சாக்கடையில் உள்ள புழு, பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், நோய்த் தொற்று பரவும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கட்டப்பட்ட அனைத்து மழை நீா் வடிகால்களும் தூா்வாரப்படாமல் உள்ளன. எனவே, அனைத்து வடிகால்களையும் தூா்வாரி, சீரமைத்துத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...