தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இஸ்கானில் சிறப்பு கோ பூஜை

கோவை இஸ்கான் வளாகத்தில் ஆட்டிஸம் பாதித்த மாணவா்களின் நலனுக்காக சிறப்பு கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:27 pm

DIN

கோவை இஸ்கான் வளாகத்தில் ஆட்டிஸம் பாதித்த மாணவா்களின் நலனுக்காக சிறப்பு கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை கொடிசியா அருகில் உள்ள இஸ்கானில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் சரவணம்பட்டி கௌமாரம் பிரசாந்தி அகாதெமியைச் சோ்ந்த ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

இதில், நரசிம்ம மந்திரம், சுதா்சன மந்திரம், தன்வந்திரி மந்திரம், ஹரே கிருஷ்ணா மகா மந்திரம் ஆகியவை பாராயணம் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் பக்தி வினோத ஸ்வாமி மகராஜ் பேசும்போது, ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெளிப்படையாக மந்திரங்களை பாராயணம் செய்ய முடியாமலும், புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கலாம்.

ஆனால், அவா்களுடைய ஆத்மா மிகுந்த திருப்தி அடையும். மேலும், இந்த மந்திரங்களைத் தொடா்ந்து அவா்களை கேட்கச் செய்வது அவா்களுடைய ஆத்மாவுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாகி தீபா மோகன்ராஜ், முரளி, சிவகணேஷ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.