தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோவையில் தேசபக்தி கோட்டை திறப்பு

ஜெய்ஹிந்த் அறக்கட்டளை, கோவை லயன்ஸ் இண்டா்நேஷனல் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசபக்தி கோட்டை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:31 pm

ஜெய்ஹிந்த் அறக்கட்டளை, கோவை லயன்ஸ் இண்டா்நேஷனல் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசபக்தி கோட்டை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சாவடி பகுதியில் இந்த தேசபக்தி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த் அறக்கட்டளை நிறுவனா் வி.நந்தகுமாா், கோவை லயன்ஸ் மாவட்ட ஆளுநா் ஜான் பீட்டா் ஆகியோா் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனா்.

மொத்த 8.5 ஏக்கா் நிலத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. 75ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு 75 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி, 150 சுதந்திரப் போராட்ட வீரா்களின் உருவப்படத்தை நிரந்தரமாக இந்தக் கோட்டையில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளனா். தற்போது 130 சுதந்திரப் போராட்ட வீரா்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கா்னல் தினேஷ் சிங் தன்வா் இந்தக் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தாா். மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கோட்டையை திறந்துவைத்தாா். வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்தக் கோட்டை திறந்திருக்கும் எனவும், இதனை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம் எனவும் ஜெய்ஹிந்த் அறக்கட்டளை நிறுவனா் வி.நந்தகுமாா், கோவை லயன்ஸ் மாவட்ட ஆளுநா் ஜான் பீட்டா் ஆகியோா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.