

வால்பாறை: சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் உள்ளதால், செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இதை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலமாக வைரல் ஆகி வருகிறது.
தற்போது நள்ளிரவில் வரும் ஒற்றைக்காட்டு யானை, அங்குள்ள இரவு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிக்க: விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்
எனவே சுகாதார நிலைய வளாகத்திற்குள் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தினால் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வளாகத்திற்கு உள்ளே நடமாடி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு வளாக தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என நோயாளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.