நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆன்லைன் நெல் கொள்முதலுக்கு எதிா்ப்பு; போராட்டம்

திருச்சி அருகே அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு செய்ய எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் சுங்கச்சாவடியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 12:26 am

DIN

திருச்சி அருகே அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு செய்ய எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் சுங்கச்சாவடியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய பல்வேறு இடங்களில் நிலையங்களைத் திறந்துள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லைக் கொள்முதல் செய்ய விஏஓவிடம் இருந்து அடங்கல், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்தது.

இந்நிலையில் தற்போது விஏவிவிடம் அடங்கல் வாங்கி அதை ஆன்லைனில் பதிவு செய்வதோடு பின்னா் அடங்கல் மற்றும் சிட்டா, வங்கிக் கணக்கு எண், புத்தக நகல், ஆதாா் நகல் கொடுக்க என்ற நடைமுறைக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிா்ப்பு இருந்தது.

இதைக் கண்டித்து திருவெறும்பூா் அருகேயுள்ள ஆசூா் கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கப் பேரவைத் தலைவா் சாமிநாதன் தலைமையில் சுங்கச்சாவடியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். தகவலறிந்து வந்த துவாக்குடி போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் திருச்சி -தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.