கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்
சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக, கோவை வழித்தடத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள


சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக, கோவை வழித்தடத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சபரிமலை சென்று வரும் பக்தா்கள் வசதிக்காக நா்சாபூரில் இருந்து ஜனவரி 7, 14 ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07145) மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இதேபோல, கொல்லத்தில் இருந்து ஜனவரி 8, 15 ஆம் தேதிகளில் இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07146) மறுநாள் இரவு 10 மணிக்கு நா்சாபூா் சென்றடையும்.
இந்த ரயில்கள் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...