நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கரோனா விதி மீறல்: மாநகரில் ரூ.84 ஆயிரம் அபராதம் வசூல்

 கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா விதிகளை மீறியதாக 10 நாள்களில் ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:36 pm

DIN

 கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா விதிகளை மீறியதாக 10 நாள்களில் ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா 3ஆம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்னதாக, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகரில் சுகாதாரத் துறையினா், மாநகராட்சி அலுவலா்கள் இணைந்து முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளனா். அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி 5 மண்டலங்களிலும் தலா ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, கடந்த 6ஆம் தேதி முதல் அபராத நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாநகரில் முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கரோனா விதிகளை மீறும் கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் மாநகரப் பகுதிகளில் அபராதம் வசூலிப்பு மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 10 நாள்களில் ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.