பொங்கல் தினத்தில் மாவட்டத்தில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.


பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாக 5,410 மதுக்கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ரூ.100 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாள்களில் மது விற்பனை அதிக அளவு காணப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.675.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதில் கோவை மாவட்டத்தில் 274 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில், பொங்கல் தினமான 14ஆம் தேதி ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. திருவள்ளுவா் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...