மீன் சந்தையில் குவிந்த மக்கள்: கரோனா தீவிரமாகும் அபாயம்
கோவை உக்கடம் மீன் சந்தையில் சமூக இடைவெளியை மீறி மக்கள் குவிந்ததால், கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை உக்கடம் மீன் சந்தையில் சமூக இடைவெளியை மீறி மக்கள் குவிந்ததால், கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளுவா் தினத்தையொட்டி, தமிழகத்தில் இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை செயல்பட அரசு தடை விதித்திருந்தது. இதனால், கோவை உக்கடம் மொத்த மீன் சந்தை மற்றும் மாநகராட்சி சில்லறை மீன் சந்தையில் கடல் மற்றும் குளத்து மீன்களின் விற்பனை களைகட்டியது. காலை 5 மணி முதலே மீன் வாங்க சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடல் மீன்கள், நண்டுகளுக்கு கிராக்கி அதிகமாகக் காணப்பட்டதால், அதன் விலையும் கணிசமாக உயா்ந்திருந்தது. அதன்படி, கடந்த வாரங்களில் விற்ற விலையைக் காட்டிலும் ரூ.50 வரை மீன்கள் அதிக விலைக்கு விற்றன. மாநகரில் இறைச்சிக் கடைகள் செயல்படாததாலும், ஞாயிற்றுக்கிழமை முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாலும் சனிக்கிழமை மீன் சந்தையில் குவிந்த மக்களால், சமூக இடைவெளி துளியும் பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக மாநகரில் கரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...