கோவை ஜல்லிக்கட்டு: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

கோவை ஜல்லிக்கட்டு போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கோவை ஜல்லிக்கட்டு
கோவை ஜல்லிக்கட்டு

கோவை: கோவை ஜல்லிக்கட்டு போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்ட நிர்வாகம், ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி செட்டிப்பாளையம் பை-பாஸ் சாலை அருகிலுள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

முதல் காளையாக சரவணம்பட்டி பெருமாள் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக மாடுபிடி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதேபோல் காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. போட்டியில் 700 காளைகளுக்கும், 300 மாடு பிடி வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்கு பொது மக்களுக்கு அனுமதியில்லாததால் போட்டி சமூக ஊடகங்கள், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com