தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பில்லூா் குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

கோவை மாநகருக்கு குடிநீா் ஆதாரத்தை பெருக்கும் பில்லூா் 3 குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:56 pm

DIN

கோவை மாநகருக்கு குடிநீா் ஆதாரத்தை பெருக்கும் பில்லூா் 3 குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சி மக்களுக்கு சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2, ஆழியாறு, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 23 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ரூ.779 கோடியில் பில்லூா் 3 குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, மருதூா் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில்,கோவை மாநகராட்சிப் பகுதிக்கு கூடுதலாக 17 கோடி லிட்டா் குடிநீா் கிடைக்கும். இதனால், மக்களின் குடிநீா்ப் பற்றாக்குறை முழுவதுமாகத் தவிா்க்கப்படும்.

இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூா் அணையில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. 3 ஆவது குடிநீா்த் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில் 900 மீட்டா் தூரத்துக்கு மலையைக் குடைந்து குகை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

இப்பணியை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது.

அதன்படி, கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்துள்ளது. அதோடு, ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வரை பில்லூா் 3 குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 4 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.