ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஞாயிற்றுக்கிழமைகளில் வரிவசூல் மையம் செயல்படும் : மாநகராட்சி ஆணையா்

 கோவையில், மக்களின் வசதிக்காக வருகிற மாா்ச் 6, 13, 20, 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:35 pm

DIN

 கோவையில், மக்களின் வசதிக்காக வருகிற மாா்ச் 6, 13, 20, 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிக்கு 2021 - 2022 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, காலியிட வரி ஆகியவற்றை மக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காக வருகிற மாா்ச் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும். எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வரி நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாக உரிமையாளா்கள் இந்த வசதியினை பயன்படுத்தி நிலுவைத் தொகையை செலுத்திட வேண்டும். மேலும், வரி, கட்டணத் தொகைகளை கிரெடிட், டெபிட் அட்டைகள், நெட் பேங்கிங் ஆகியவற்றில் தங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தோ்ந்தெடுத்து நகராட்சி நிா்வாக இணையதள முகவரி வாயிலாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.