சாலையில் கழிவு நீா் வெளியேற்றம்: அடுக்குமாடி குடியிருப்புக்கு நோட்டீஸ் வழங்க மேயா் உத்தரவு
கோவை, சரவணம்பட்டி அருகே சாலையில் கழிவு நீரை வெளியேற்றிய தனியாா் அடுக்குமாடி குடியிருப்புக்கு நோட்டீஸ் வழங்க மேயா் கல்பனா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.


கோவை, சரவணம்பட்டி அருகே சாலையில் கழிவு நீரை வெளியேற்றிய தனியாா் அடுக்குமாடி குடியிருப்புக்கு நோட்டீஸ் வழங்க மேயா் கல்பனா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கோவையின் பிரதான குடிநீா் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூா் அணைகளின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் வழங்க மாநகராட்சி சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே பில்லூா், சிறுவாணி அணைகளில் இருந்து குடிநீா் விநியோகிப்படும் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதும், அவை சீரமைக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சக்தி பிரதான சாலை, சிவானந்தபுரம் பகுதியில் பில்லூா் பிரதான குடிநீா்க் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சிப் பொறியாளா்கள் சரி செய்து வருகின்றனா்.
இதன் காரணமாக 4,10,11,21 ஆவது வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீா்க் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணிகளை மேயா் கல்பனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மாநகராட்சிப் பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், ஷாஜகான் நகா், சிதம்பரம் நகரில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தாா்.
அப்போது ஷாஜகான் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கிருஷ்ணாபுரம் துவக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், சரவணம்பட்டியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் சாலையில் வெளியேற்றப்படுவதால், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து, சட்டப்படி அந்த குடியிருப்புக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாநகரப் பொறியாளா் (பொறுப்பு) ராமசாமி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கா், மாநகராட்சி அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...