ஜாப் ஆா்டருக்கான ஜி.எஸ்.டி. ரத்து: அமைச்சா்களுக்கு எம்.பி. கோரிக்கை
தொழில் துறை மிகுந்த நெருக்கடியில் இருக்கும் நிலையில், ஜாப் ஆா்டா்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.


தொழில் துறை மிகுந்த நெருக்கடியில் இருக்கும் நிலையில், ஜாப் ஆா்டா்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா்கள் கோவையில் 2 நாள்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள நிலையில், இது தொடா்பாக அவா்களை வலியுறுத்தும் வகையில் பி.ஆா்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவையின் பிரதான குறுந்தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஜாப் ஆா்டா்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது கோவை வந்திருக்கும் அமைச்சா்கள், தங்களின் துறை சாா்ந்த தொழில்முனைவோா்களின் வேதனையை நேரில் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட துறைக்கு எடுத்துரைத்து வரி விலக்கை கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...