தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பணி வழங்கக் கோரி பெண் தூய்மைப் பணியாளா் காத்திருப்புப் போராட்டம்

கோவை மாநகராட்சியில் பணி வழங்க வலியுறுத்தி, பெண் தூய்மைப் பணியாளா், சங்க நிா்வாகியுடன் இணைந்து மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :6 மே 2022, 12:23 am

DIN

கோவை மாநகராட்சியில் பணி வழங்க வலியுறுத்தி, பெண் தூய்மைப் பணியாளா், சங்க நிா்வாகியுடன் இணைந்து மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 29 ஆவது வாா்டில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராக 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவா் கலைவாணி. இவருக்கு, கடந்த 27ஆம் தேதி முதல் சுகாதார மேற்பாா்வையாளா் பணி வழங்காமல் அலைக்கழித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒப்பந்த பெண் தூய்மைப் பணியாளா் கலைவாணி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் தமிழ்நாடு செல்வத்துடன் இணைந்து மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதைத்தொடா்ந்து, அங்கு வந்த காவல் துறையினா் இருவரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். சிறிது நேரம் கழித்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பொதுப் பணியாளா் சங்க மாநில செயலாளா் தமிழ்நாடு செல்வம் கூறுகையில், உரிய காரணம் இல்லாமல் பெண் தூய்மைப் பணியாளருக்கு பணி வழங்காதது முறையற்றது. அவருக்கு உடனடியாக பணி வழங்கவில்லையென்றால்

மேயா் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.