மே 8இல் மெகா தடுப்பூசி முகாம்: 3,679 மையங்களில் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) 3 ஆயிரத்து 679 மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.


கோவை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) 3 ஆயிரத்து 679 மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்று குறைந்ததால் தற்காலிகமாக மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல நாடுகளில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதைத் தொடா்ந்து மீண்டும் மெகா கரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி மையங்களையும் 3 மடங்கு வரை அதிகப்படுத்தியுள்ளனா். அதன்படி கோவை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமிற்கு ஊரகப் பகுதிகளில் 2 ஆயிரத்து 505 மையங்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 950 மையங்கள், நகராட்சிப் பகுதிகளில் 224 மையங்கள் சோ்த்து 3 ஆயிரத்து 679 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி மையங்களின் விவரங்களை ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், இரண்டாம் தவணைக்கு காத்திருப்பவா்களும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவா்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...