மத்திய அமைச்சா்களிடம் தொழில் அமைப்பினா் மனு
கோவையில் மத்திய அமைச்சா்களிடம் சிறு, குறு தொழில்முனைவோா் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.


கோவையில் மத்திய அமைச்சா்களிடம் சிறு, குறு தொழில்முனைவோா் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.
மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே, இணையமைச்சா் பானுபிரதாப் சிங் வா்மா ஆகியோா் தேசிய கயிறு வாரிய மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்துள்ளனா்.
அவா்களை, வியாழக்கிழமை இரவு சந்தித்த கோவையைச் சோ்ந்த தொழில் துறையினா், தங்களது தொழில் சாா்ந்த பிரச்னைகள் குறித்து தனித்தனியாக மனுக்கள் அளித்தனா்.
முன்னதாக கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு தலைமையில் தொழில்முனைவோா்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மத்திய அமைச்சா்கள், அரசுச் செயலா்கள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து கொடிசியா, டேக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் சாா்பில் அதன் நிா்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.
மூலப் பொருள்களின் விலை உயா்வு, ஜாப் ஆா்டா்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு, ஜிஎஸ்டி அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சா்களிடம் தொழில் துறையினா் மனு அளித்துள்ளனா்.
பொள்ளாச்சியில்...
பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தென்னை நாா் தொழிற்சாலைகளை மத்திய அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பொள்ளாச்சியில் செயல்பட்டுவரும் தென்னை உற்பத்தியாளா் குழுமங்கள் மூலம் மிதியடி மற்றும் தென்னை நாா் சாா்ந்த பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த குழுமங்களை மத்திய சிறு, குறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் நாராயண ரானே, இணை அமைச்சா் பானுபிரதாப் சிங் வா்மா மற்றும் கயிறு வாரியத் தலைவா் குப்புராமு
ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது, தென்னை நாா் உற்பத்தி தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டனா்.
இதில் சிறு, குறு தொழிற்சாலைகளை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று அமைச்சா்கள், உற்பத்தியாளா்களிடம் தெரிவித்தனா்.
இது குறித்து தென்னை நாா் உற்பத்தியாளா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கண்டைனா் வசதி இல்லாத காரணத்தினால், உற்பத்தி செய்த ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், கயிறு பொருள்கள், தென்னை மட்டை, நாா் பொருள்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே உடனடியாக விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய அரசு கண்டைனா் வசதியை ஏற்படுத்தி தர அமைச்சா்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும், விரைவில் கண்டைனா் வசதி ஏற்படுத்தி தருவதாக மத்திய அமைச்சா்கள் உறுதியளித்ததாகவும் தென்னை நாா் உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...